வர்த்தக துளிகள்: மெகா பி.சி.பி., ஆலை ஆந்திராவில் அமைகிறது
வர்த்தக துளிகள்: மெகா பி.சி.பி., ஆலை ஆந்திராவில் அமைகிறது
வர்த்தக துளிகள்: மெகா பி.சி.பி., ஆலை ஆந்திராவில் அமைகிறது
ADDED : செப் 12, 2025 01:14 AM

இறால் ஏற்றுமதி வருவாய் 12 சதவீதம் வரை சரியும்
அ மெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக, நடப்பு நிதியாண்டில் இறால் ஏற்றுமதியாளர் வருவாய் 12 சதவீதம் சரிவை காணும் என இண்ட்ரா ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவுக்கு அளவு அடிப்படையில் 41 சதவீதமும், மதிப்பு அடிப்படையில் 48 சதவீதமும் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. போட்டியை தக்க வைப்பதற்கான, இறால் இருப்பு வைத்திருக்கும் நாட்களை அதிகரிப்பதற்கு மூலதன தேவையும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மெகா பி.சி.பி., ஆலை ஆந்திராவில் அமைகிறது
நா ட்டின் மிகப்பெரிய பி.சி.பி., தயாரிப்பு ஆலையை ஆந்திர அரசு அமைக்க உள்ளது.
திருப்பதி அடுத்த நாயுடுபேட்டை டவுன் அருகே மெனகுரு கிராமத்தில் இந்த பவர் சர்கியூட் போர்டு ஆலையை அமைக்க, சைம்ரா ஸ்டிராட்டஜிக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
சைம்ரா நிறுவனம் 1,076 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. இதன் வாயிலாக 1,011 பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எஸ்.பி., குழுமத்தில் சைரஸ் மிஸ்திரி மகன்கள்
ஷா பூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் நிர்வாகத்தை கவனித்து கொள்ள சைரஸ் மிஸ்ரியின் மகன்களான பிரோஷ், ஜகான் ஆகியோரை அக்குழுமத்தின் தலைவர் ஷாபூர் மிஸ்ரி களமிறக்கி உள்ளார்.
மிஸ்ரியின் மகன்களுடன், தன் மகன் பலோன் ஆகியோருக்கு நிறுவனத்தை வழிநடத்துவது தொடர்பாக வழிகாட்டுதல்களை அளித்து வரும் ஷாபூர் மிஸ்ரி, இவர்களை படிப்படியாக இயக்குநர்கள் குழுவில் சேர்க்க தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.