ஆறு மாதங்களுக்கு முன்பாகவே துவங்கும் 'வின்பாஸ்ட்' ஆலை
ஆறு மாதங்களுக்கு முன்பாகவே துவங்கும் 'வின்பாஸ்ட்' ஆலை
ஆறு மாதங்களுக்கு முன்பாகவே துவங்கும் 'வின்பாஸ்ட்' ஆலை
ADDED : ஜூன் 15, 2024 01:01 AM

புதுடில்லி:'வின்பாஸ்ட்' நிறுவனம் தமிழகத்தில் அமைத்து வரும் ஆலையை, துவக்க திட்டமிட்ட ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே துவக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமை சேர்ந்த பன்னாட்டு வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட், மின் வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம், துாத்துக்குடியில், 16,000 கோடி ரூபாய் மதிப்பில், மின்சார கார் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து வருகிறது.
திட்டமிட்ட காலத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே, ஆலையை துவக்க உள்ளதாக, இந்நிறுவனத்தின் நிறுவனர் தற்போது தெரிவித்துள்ளார். அனேகமாக அடுத்த ஆண்டின் முதல் பாதியில் இந்த ஆலை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.