ரூ.7,000 கோடிக்கு ஆர்டர் அதானியிடமிருந்து பெற்ற 'பெல்'
ரூ.7,000 கோடிக்கு ஆர்டர் அதானியிடமிருந்து பெற்ற 'பெல்'
ரூ.7,000 கோடிக்கு ஆர்டர் அதானியிடமிருந்து பெற்ற 'பெல்'
ADDED : ஜூன் 15, 2024 01:00 AM

புதுடில்லி:அதானி குழுமத்திடம் இருந்து 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான, இரு மின் உற்பத்தி நிலையங்களுக்கான ஆர்டர்களை பெற்றுள்ளதாக, 'பெல்' நிறுவனம் தெரிவித்து உள்ளது.
பெல் எனப்படும் 'பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்' நிறுவனம், மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனமாகும்.
'அதானி பவர்' நிறுவனத்தின் சார்பில்,சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டத்திலும், உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்திலும், அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
இதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மின் உற்பத்திக்கான துணை பொருட்களை, பெல் நிறுவனம் அதற்கு சொந்தமான திருச்சி மற்றும் ஹரித்வார் ஆலைகளிலிருந்து தயாரித்து வழங்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.