'பாக்கெட் செய்தாலும், செய்யாவிட்டாலும் இனிப்பு, காரத்தில் வரி வித்தியாசம் கூடாது'
'பாக்கெட் செய்தாலும், செய்யாவிட்டாலும் இனிப்பு, காரத்தில் வரி வித்தியாசம் கூடாது'
'பாக்கெட் செய்தாலும், செய்யாவிட்டாலும் இனிப்பு, காரத்தில் வரி வித்தியாசம் கூடாது'
ADDED : ஜூலை 09, 2024 07:08 AM

சென்னை: இனிப்பு, காரம் வாங்குமிடத்தில், பாக்கெட் செய்யப்பட்ட மற்றும் பாக்கெட் செய்யப்படாத வகைகளுக்கு ஒரே மாதிரியாக, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு, உணவுப்பொருள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இனிப்பு, கார வகைகளை, முன்கூட்டியே பாக்கெட் செய்து விற்றால், 12 சதவீதம் ஜி.எஸ்.டி.,யும்; வாங்கும்போது சிறு பாக்கெட்களில் வழங்கினால், 5 சதவீதம் ஜி.எஸ்.டி.,யும் விதிக்கப்படுகின்றன.
இதுகுறித்து, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:
பாக்கெட் செய்யப்பட்ட பிராண்டு உணவுப் பொருட்களுக்கு, 12 சதவீதம் ஜி.எஸ்.டி., என்றும், சிறிது, சிறிதாக அவ்வப்போது பேக் செய்து கொடுப்பதற்கு, 5 சதவீதம் என்றும் விதிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், 5 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்தியுள்ளனர்.
தற்போது, அவர்களில் பலருக்கும், 12 சதவீத வரி செலுத்த வேண்டும் என்றும், 5 சதவீதம் செலுத்தியது போக, மீதியுள்ள 7 சதவீதத்தை செலுத்தக் கோரி, ஜி.எஸ்.டி., பிரிவில் இருந்து, 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது. இதனால், வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஏழை, நடுத்தர மக்களால் தினமும் உபயோகிக்கப்படும் இனிப்பு, கார வகைகள் பாக்கெட் செய்தாலும்; செய்யவில்லை என்றாலும், 5 சதவீதம் ஜி.எஸ்.டி., என, ஒரே மாதிரியான வரியை அமல்படுத்த வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்திக்கும் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இனிப்பு, கார வகைகளை, முன்கூட்டியே பாக்கெட் செய்து விற்றால், 12 சதவீதம் ஜி.எஸ்.டி.,யும்; வாங்கும்போது சிறு பாக்கெட்களில் வழங்கினால், 5 சதவீதம் ஜி.எஸ்.டி.,யும் விதிக்கப்படுகின்றன