டாடா எஸ்.யு.வி., கார்களுக்கு ரூ.1.40 லட்சம் வரை சலுகை
டாடா எஸ்.யு.வி., கார்களுக்கு ரூ.1.40 லட்சம் வரை சலுகை
டாடா எஸ்.யு.வி., கார்களுக்கு ரூ.1.40 லட்சம் வரை சலுகை
ADDED : ஜூலை 10, 2024 12:52 AM

மும்பை: 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் எஸ்.யு.வி., வகை கார்களுக்கு, 1.40 லட்சம் ரூபாய் வரை, சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக, இன்ஜின் கார்களுக்கு 1.40 லட்சம் ரூபாய் வரையிலும், மின்சார கார்களுக்கு 1.30 லட்சம் ரூபாய் வரையிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது, 'ஹாரியர்' எஸ்.யு.வி., விலை 14.99 லட்சம் ரூபாயில் இருந்தும், 'சபாரி' விலை 15.49 லட்சம் ரூபாயில் இருந்தும் ஆரம்பமாகிறது. டாடா மோட்டார்ஸ் எஸ்.யு.வி., மாடலில், 'நெக்ஸான், ஹாரியர், சபாரி, பஞ்ச்' ஆகிய கார்கள் உள்ளன. மின்சார எஸ்.யு.வி., வரிசையில், நெக்ஸான் இ.வி., பஞ்ச் இ.வி., ஆகிய கார்கள் உள்ளன. ஹாரியர் இ.வி., அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், இதுவரை 20 லட்சம் எஸ்.யு.வி., கார்களை, டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.