'தேங்காய், கடலை எண்ணெய் ரேஷன் கடையில் வழங்க ஏற்பாடு'
'தேங்காய், கடலை எண்ணெய் ரேஷன் கடையில் வழங்க ஏற்பாடு'
'தேங்காய், கடலை எண்ணெய் ரேஷன் கடையில் வழங்க ஏற்பாடு'
ADDED : ஜூலை 09, 2024 07:04 AM

தஞ்சாவூர்: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தேங்காய், கடலை எண்ணெய் போன்றவற்றை ரேஷனில் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக, தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்து உள்ளார்.
தஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட்டையில், பாமாயில் பனை விவசாயிகளுக்கான தீர்வு மையத்தை, 'கோத்ரேஜ்' குழுமம் நேற்று துவங்கியது.
பல்வேறு திட்டங்கள்
இந்த தீர்வு மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் பனை செடிகள், அதற்கான உரங்கள், பராமரிப்பு கருவிகள், பனை விதை கொள்முதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன.
இந்த மையத்தை துவக்கி வைத்த தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது: டெல்டா பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில்கள், விவசாயப் பொருட்களை மதிப்பு கூட்டுதல் போன்றவற்றுக்கான பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன.
தொழில் முனைவோர்
இம்மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தாங்கள் விளைவித்த விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்கும் தொழில் முனைவோராக மாற வேண்டும்.
உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, பாமாயில், தேங்காயை மதிப்பு கூட்டும் பொருட்களாக மாற்ற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தேங்காய் மற்றும் கடலை எண்ணெயை ரேஷன் கடைகளில் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.