வர்த்தக வாகன விலையை உயர்த்துகிறது 'டாடா'
வர்த்தக வாகன விலையை உயர்த்துகிறது 'டாடா'
வர்த்தக வாகன விலையை உயர்த்துகிறது 'டாடா'
ADDED : ஜூன் 20, 2024 01:42 AM

புதுடில்லி: பயணியர் மற்றும் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், அதிகரித்து வரும் பொருட்கள் விலை காரணமாக, வரும் ஜூலை மாதம் முதல், அதன் அனைத்து வகை வர்த்தக வாகனங்களுக்கான விலையை, 2 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், வாகனங் களின் வகையை பொறுத்து, இந்த விலை உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்த உள்ளீட்டு செலவுகள் காரணமாக, கடந்த ஏப்ரலிலும் வர்த்தக வாகனங்களின் விலையை, 2 சதவீதம் வரை டாடா உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.