எத்தனால் சுத்திகரிப்பு ஆலை: 'ஜாக்சன் கிரீன்' அமைக்கிறது
எத்தனால் சுத்திகரிப்பு ஆலை: 'ஜாக்சன் கிரீன்' அமைக்கிறது
எத்தனால் சுத்திகரிப்பு ஆலை: 'ஜாக்சன் கிரீன்' அமைக்கிறது
ADDED : ஜூன் 20, 2024 01:38 AM

புதுடில்லி: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 'ஜாக்சன் கிரீன்' நிறுவனம், சத்தீஸ்கர் மாநிலம் லாரா கிராமத்தில், 4ஜி எத்தனால் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இதற்கான ஆர்டரை, பொதுத்துறை நிறுவனமான 'என்.டி.பி.சி.,'யிடமிருந்து பெற்றுள்ளது.
மின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் வாயுக்கள் வாயிலாக, இந்த சுத்திகரிப்பு ஆலையில், நாள் ஒன்றுக்கு 10 டன் 4ஜி எத்தனால் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக நவீன கார்பன் ஈர்க்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, இந்த ஆலையில், நாள் ஒன்றுக்கு 3 டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியும் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக ஜாக்சன் கிரீன் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் கண்ணன் கிருஷ்ணன் கூறுகையில், “நம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், எத்தனால் கலப்பு இலக்குகளை அடைவதற்கும், துாய்மையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் எத்தனால் உற்பத்தி முக்கியமானது,” என்று கூறினார்.