ADDED : ஜூன் 20, 2024 01:33 AM

புதுடில்லி: உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாகி உள்ளது, 'என்விடியா' எனும் 'சிப்' தயாரிப்பு நிறுவனம். சமீபத்தில் தான் இந்நிறுவனம், 'ஆப்பிள்' நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த என்விடியா நிறுவனம், பல ஆண்டுகளாக 'கேமிங் சிப்' தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவில் இந்நிறுவனத்தின் சிப்கள் அதிகளவு பயன்படுத்தப்படுவதைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் மீதான முதலீட்டாளர்களின் மோகமும் அதிகரித்து உள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை சந்தை நிலவரப்படி, என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 277.22 லட்சம் கோடி ரூபாய்.
அதே வேளையில் மைக்ரோசாப்ட் சந்தை மதிப்பு 275.56 லட்சம் கோடி ரூபாயாகவும்; ஆப்பிள் மதிப்பு 272.73 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தன.
இந்நிறுவனத்தில் 1999ல் 10,000 ரூபாயை முதலீடு செய்திருந்தால், இப்போது 10.30 கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.