மாணவர் திறன் மேம்பாட்டு திட்டங்களில் தமிழகம் ஆர்வம்
மாணவர் திறன் மேம்பாட்டு திட்டங்களில் தமிழகம் ஆர்வம்
மாணவர் திறன் மேம்பாட்டு திட்டங்களில் தமிழகம் ஆர்வம்
ADDED : ஜூன் 08, 2024 01:15 AM

சென்னை:“தொழில் துறையின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது,” என, தமிழக திறன் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு, தமிழக தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு மையம் சார்பில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் ஒன்று சென்னையில் நேற்று நடந்தது.
அதில் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:
தொழில்நுட்பத்தின் மாற்றம் கணிக்க முடியாது. தமிழக அரசின், 'நான் முதல்வன்' திட்டத்தின் வாயிலாக, கல்லுாரி பாடத்திட்டங்களில், தொழில் துறைகளுக்கு ஏற்ப திறன்களை வழங்குகிறது. இந்த முயற்சியை மேலும் அதிகரிக்க, பல்வேறு தொழில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்துள்ளோம்.தொழில் துறையின் தேவைக்கு ஏற்ப திறமையான மனிதவளத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சி.ஐ.ஐ., தமிழக தலைவர் ஸ்ரீவத்ஸ்ராம் பேசும்போது, 'மோட்டார் வாகன துறையில் இயந்திரங்கள் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்களை விட, மென்பொருளின் பங்கும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றங்களால், வினியோக தொடரில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது' என்றார்.