ஸ்மார்ட் வாட்ச் விற்பனை மார்ச் காலாண்டில் சரிவு
ஸ்மார்ட் வாட்ச் விற்பனை மார்ச் காலாண்டில் சரிவு
ஸ்மார்ட் வாட்ச் விற்பனை மார்ச் காலாண்டில் சரிவு
ADDED : ஜூன் 08, 2024 01:19 AM

புதுடில்லி:இந்தியாவில் ஸ்மார்ட் வாட்ச் விற்பனை, கடந்த மார்ச் காலாண்டில் சரிவை கண்டதாக, 'கவுன்டர்பாயின்ட் ரிசர்ச்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, இரண்டு மற்றும் மூன்று இலக்க வளர்ச்சி கண்டு வந்த ஸ்மார்ட் வாட்ச் சந்தை, கடந்த மார்ச் காலாண்டில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 'பயர் போல்ட், நாய்ஸ், போட்' ஆகிய பிராண்டுகளின் விற்பனை, முறையே 15, 2 மற்றும் 24 சதவீதம் சரிவை கண்டுள்ளன.
குறைவான புதுமை, குறைந்த வேறுபாடுகள் போன்ற காரணங்களால், நுகர்வோர் தற்போது ஸ்மார்ட் வாட்ச் வாங்க விரும்புவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே நிறுவனங்கள் வசம் இருந்த அதிகப்படியான இருப்பும், விற்பனை சரிந்ததற்கு ஒரு காரணமாகும்.
எனினும், சில பிராண்டுகளின் விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது. பிரீமியம் பிரிவில், 'ஆப்பிள்' ஸ்மார்ட் வாட்ச் விற்பனை, மும்மடங்கு அதிகரித்துள்ளது.
புதிய மாடல்களின் அறிமுகத்தால், 'பாஸ்ட்ராக்' விற்பனையும் வளர்ச்சி கண்டது. குறைந்த வசதிகளுடன், நுழைவு நிலை பிரிவில் செயல்பட்டு வரும் பீட் எக்ஸ்.பி., விற்பனையும் இரு மடங்கு உயர்ந்தது.