'ஏர் இந்தியா - விஸ்தாரா' இணைப்புக்கு ஒப்புதல்
'ஏர் இந்தியா - விஸ்தாரா' இணைப்புக்கு ஒப்புதல்
'ஏர் இந்தியா - விஸ்தாரா' இணைப்புக்கு ஒப்புதல்
ADDED : ஜூன் 08, 2024 01:11 AM

புதுடில்லி:'ஏர் இந்தியா - விஸ்தாரா' இணைப்புக்கு, என்.சி.எல்.டி., எனும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது.
டாடா குழுமம் அதற்கு சொந்தமான ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்களை ஒன்றாக இணைப்பதாக, கடந்த 2022 நவம்பரில் அறிவித்தது.
டாடா சன்ஸ் நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனத்தில் 100 சதவீத பங்குகளை வைத்துள்ளது. டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட விஸ்தாரா நிறுவனத்தில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 49 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த இணைப்பு ஒப்பந்தப்படி, விஸ்தாராவில் சிங்கப்பூர் ஏர்லைனின் பங்கு, 25.10 சதவீதமாக மாறும்.
இந்த இணைப்பு திட்டத்துக்கு, இந்திய போட்டி ஆணையம், விமான போக்குவரத்து இயக்குனரகம் ஆகியவை முன்பு, ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயமும் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, உலகின் மிகப்பெரிய விமான குழுமங்களில் ஒன்றாக டாடா குழுமம் உருவெடுக்கிறது.