'கட்டி முடித்த வீடுகளை விற்க 22 மாதங்கள் தேவைப்படும்'
'கட்டி முடித்த வீடுகளை விற்க 22 மாதங்கள் தேவைப்படும்'
'கட்டி முடித்த வீடுகளை விற்க 22 மாதங்கள் தேவைப்படும்'
ADDED : ஜூன் 08, 2024 01:09 AM

புதுடில்லி:ஏழு முக்கிய நகரங்களில், விற்கப்படாத வீடுகளின் இருப்பு, கடந்த 2019 டிசம்பர் முதல் 2024 மார்ச் காலாண்டு வரையிலான காலகட்டத்தில், 24 சதவீதம் உயர்ந்துள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ஜே-.எல்.எல்., தெரிவித்துள்ளது.
இவற்றை விற்க 22 மாதங்கள் ஆகும் என குறிப்பிட்டுள்ள அந்நிறுவனம், மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில், விற்கப்படாத வீடுகளின் இருப்பு எண்ணிக்கை, கடந்த 2019ம் நிதியாண்டு டிசம்பர் முதல், கடந்த 2024ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில், 24 சதவீதம் உயர்ந்து, 4.68 லட்சமாக அதிகரித்துள்ளது-.
அதிக வீடுகள் கட்டப் பட்டதால், இந்த இருப்பு உயர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019ல், வீடுகளை விற்பனை செய்வதற்காக எடுத்துக்கொண்ட கால அவகாசம் 32 மாதங்களாக இருந்தது. அந்த கால அவகாசம், நடப்பு 2024ம் ஆண்டின் முதல் காலாண்டில் 22 மாதங்களாக குறைந்துள்ளது. வீட்டுத் தேவையின் அதிகரிப்பால் குறைந்துள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.