மூலப்பொருட்கள் விலை உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
மூலப்பொருட்கள் விலை உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
மூலப்பொருட்கள் விலை உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 02, 2024 01:57 AM

சென்னை:அலுமினியம், காப்பர் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால், உற்பத்தி செலவு அதிகரித்து, பாதிக்கப்பட்டுஉள்ளதாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
உற்பத்தி துறையில் இரும்பு, காப்பர், அலுமினியம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
மார்ச் முதல் வாரத்தில், 1 கிலோ காப்பர் விலை சராசரியாக, 800 ரூபாய் என்றளவில் இருந்தது. இது, மே இறுதியில், 1,000 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இதேபோல், 1 கிலோ அலுமினியத்தின் விலை, 220 ரூபாயில் இருந்து, 290 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்க தலைவர் ஜே.ஜேம்ஸ் கூறியதாவது:
தங்கம் போன்று காப்பர், அலுமினியம் போன்ற மூலப்பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பெரிய நிறுவனங்கள், ஓராண்டிற்கு என ஆர்டர் வழங்குகின்றன. மூலப் பொருட்களின் விலை ஆர்டர் பெறும் போது இருந்ததைவிட உயர்ந்து விடுகிறது. ஆனால், உற்பத்தி செய்த பொருட்களின் விலையை உயர்த்த முடிவதில்லை.
எனவே, மூலப்பொருட்களின் விலையை கண்காணித்து, விலை நிர்ணயம் செய்ய, அரசு ஒரு கண்காணிப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும். மேலும், மூலப்பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விலையை கட்டுக்குள் வைக்க அரசு கண்காணிப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்