எல்.ஐ.சி., நிகர லாபம் 2.50% அதிகரிப்பு
எல்.ஐ.சி., நிகர லாபம் 2.50% அதிகரிப்பு
எல்.ஐ.சி., நிகர லாபம் 2.50% அதிகரிப்பு
ADDED : ஜூன் 02, 2024 01:56 AM

சென்னை:பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டுக்கான நிகர லாபம், 2.49 சதவீதம் அதிகரித்து, 13,762 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பங்குதாரர்களுக்கு மொத்த ஆண்டு ஈவுத்தொகையாக, 10 ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது, இதில், 4 ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது.
ஒட்டுமொத்தமாக கடந்த நிதியாண்டுக்கான நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 40,676 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் இது 36,397 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த நிதியாண்டில் எல்.ஐ.சி.,யின் தனிநபர் பிரீமிய வருமானம் 3.04 லட்சம் கோடி ரூபாயாகவும்; மொத்த பிரீமிய வருமானம் 4.75 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.
நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து மதிப்பு, 16.48 சதவீதம் அதிகரித்து, 51.22 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. முதல் பிரீமிய வருமான அடிப்படையில் 58.87 சதவீத பங்களிப்போடு, கடந்த நிதியாண்டிலும் எல்.ஐ.சி., தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.