ரூ.5,000 வரை விலையை குறைத்தது 'மாருதி'
ரூ.5,000 வரை விலையை குறைத்தது 'மாருதி'
ரூ.5,000 வரை விலையை குறைத்தது 'மாருதி'
ADDED : ஜூன் 02, 2024 01:59 AM

புதுடில்லி:குறிப்பிட்ட சில மாடல் கார்களுக்கு, 5,000 ரூபாய் வரை விலை குறைப்பு செய்துள்ளதாக, 'மாருதி சுசூகி' நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின், ஏ.ஜி.எஸ்., எனப்படும் 'ஆட்டோ கியர் ஷிப்ட்' வகையைச் சேர்ந்த பல்வேறு மாடல்களுக்கான விலையை குறைத்துள்ளதாக மாருதி அறிவித்தது.
இந்த விலைக் குறைப்பு, நேற்று முதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் அறிவிப்பின்படி, ஆல்ட்டோ கே10, எஸ் - பிரஸ்ஸோ, செலிரியோ, வேகன் - ஆர், ஸ்விப்ட், டிசையர், பலேனோ, இக்னிஸ் உள்ளிட்ட பல கார்களுக்கு 5,000 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஏ.ஜி.எஸ்., கார்களின் விலையை குறைப்பதால், அவற்றின் விற்பனை அதிகரிக்கும் என, மாருதி சுசூகி எதிர்பார்க்கிறது.