வோடபோனுக்கு ரூ.14,000 கோடி கடன் தர எஸ்.பி.ஐ., ஒப்புதல்
வோடபோனுக்கு ரூ.14,000 கோடி கடன் தர எஸ்.பி.ஐ., ஒப்புதல்
வோடபோனுக்கு ரூ.14,000 கோடி கடன் தர எஸ்.பி.ஐ., ஒப்புதல்
ADDED : ஜூன் 12, 2024 12:00 AM

புதுடில்லி:'வோடபோன் ஐடியா' நிறுவனம், 14,000 கோடி ரூபாய் கடனுக்கான ஒப்புதலை எஸ்.பி.ஐ., வங்கி குழுமத்திடம் இருந்து பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான கடனளிக்கும் கூட்டமைப்பு, வோடபோன் ஐடியாவுக்கு, 14,000 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு கொள்கை ரீதியிலான ஒப்புதலை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொகையை, கடன்களை திருப்பி செலுத்தவும், 5ஜி நெட்வொர்க்கை உருவாக்கவும், கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுக்கவும் வோடபோன் ஐடியா பயன்படுத்த உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வோடபோன் ஐடியா, தன் 40,000 கோடி ரூபாய் ஒட்டுமொத்த வங்கிக் கடனை, தற்போது 4,000 கோடி ரூபாயாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.