பி.எம்.டபுள்யு., பரிசளித்த நிறுவனத்தில் பணிநீக்கம் 'கிஸ்ப்ளோ'
பி.எம்.டபுள்யு., பரிசளித்த நிறுவனத்தில் பணிநீக்கம் 'கிஸ்ப்ளோ'
பி.எம்.டபுள்யு., பரிசளித்த நிறுவனத்தில் பணிநீக்கம் 'கிஸ்ப்ளோ'
ADDED : ஜூன் 11, 2024 11:54 PM

புதுடில்லி:சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 'கிஸ்ப்ளோ' நிறுவனம், அதன் 50 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
மென்பொருள் தீர்வுகளை வழங்கி வரும் இந்நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதன் ஐந்து மூத்த ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக, 1 கோடி ரூபாய் மதிப்புடைய பி.எம்.டபிள்யு., கார்களை வழங்கியது.
ஆனால், தற்போது நிறுவனத்தின் தயாரிப்பு திட்டத்தை மறுசீரமைக்கும் நோக்கில், அதன் 50 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு, ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், புதிய வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளதாகவும், நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.