மளிகை கடைகளுக்கு புது சவால் 10 நிமிட ஆன்லைன் டெலிவரி
மளிகை கடைகளுக்கு புது சவால் 10 நிமிட ஆன்லைன் டெலிவரி
மளிகை கடைகளுக்கு புது சவால் 10 நிமிட ஆன்லைன் டெலிவரி
ADDED : ஜூன் 11, 2024 11:48 PM

மும்பை:மின்னணு வர்த்தக தளங்களின் அறிமுகத்தை தொடர்ந்து, ஆடம்பர பொருட்கள் மட்டுமின்றி, அத்தியாவசிய மளிகைப் பொருட்களையும், தற்போது மக்கள் ஆன்லைனிலே வாங்குகின்றனர். நாட்டின் ஆன்லைன் மளிகை சந்தை மதிப்பு, 91,300 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், உடனடி டெலிவரிகளின் பங்கு மட்டும் 45 சதவீதமாக உள்ளது.
ஆர்டர் செய்த 10 நிமிடங்களுக்குள், அந்த ஆர்டரை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பது, 'குயிக் டெலிவரி' அதாவது உடனடி டெலிவரி என்று அழைக்கப்படுகிறது.
'இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட்' போன்ற மளிகை வணிக தளங்கள், உடனடி டெலிவரி வழங்குவதில், அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களை விடவும் விரைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இவை, தற்போது சிறிய மளிகை கடைகள் செயல்படுவதற்கு பெரும் சவாலாக மாறி உள்ளன.
பெரும்பாலும், 21 முதல் 35 வயதுக்குள் இருக்கும் வாடிக்கையாளர்கள், நேரம் விரயம் மற்றும் வசதியை கருதி, இத்தளங்களில் தங்கள் மளிகைகளை வாங்குகின்றனர்.
இதனால், வரும் 2030க்குள், ஆன்லைன் மளிகை சந்தையில், குயிக் டெலிவரியின் பங்கு 70 சதவீதத்தை எட்டும் என்று கணிக்கப்படுகிறது.