ADDED : ஜூலை 18, 2024 01:43 AM

புதுடில்லி:கோல்கட்டாவைச் சேர்ந்த 'கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்டு இன்ஜினியர்ஸ் லிமிடெட்' நிறுவனம், பெருங்கடல் ஆராய்ச்சிக்கான கப்பலை தயாரிக்க,, 840 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தை, மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்திடம் இருந்து பெற்றுள்ளது.
இந்த கப்பல், கடற்பரப்பை ஆராய்வது மட்டுமின்றி; ஆழமான நீரில், புவி இயற்பியல் நில அதிர்வைக் கண்டறியவும் உதவியாக இருக்கும்.
கூடுதலாக, கடல் வெப்பநிலை, ஆழம் தொடர்பான விபரங்கள் மற்றும் நீர் மாதிரிகளை ஆராய்வது உள்ளிட்ட செயல்பாடுகளையும் மேற்கொள்ளும்.
இந்த கப்பல் 5,900 டன் எடை கொண்டதாகும். 14 கடல் மைல்கல் வேகத்தில் பயணிக்கும். அதிகபட்சமாக, 6,000 மீட்டர் ஆழம் வரை இதன் செயல்பாடுகள் இருக்கும்.
ஆராய்ச்சிக் கப்பல்கள் தயாரிப்பில், 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்நிறுவனத்திற்கு அனுபவம் உண்டு.