Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 15.90% விற்பனையை எட்டிய எத்தனால் கலந்த பெட்ரோல்

15.90% விற்பனையை எட்டிய எத்தனால் கலந்த பெட்ரோல்

15.90% விற்பனையை எட்டிய எத்தனால் கலந்த பெட்ரோல்

15.90% விற்பனையை எட்டிய எத்தனால் கலந்த பெட்ரோல்

ADDED : ஜூலை 18, 2024 01:45 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி:கடந்த ஜூன் மாத நிலவரப்படி, எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை அளவு 15.90 சதவீதத்தை எட்டிஉள்ளதாக, பி.பி.ஏ.சி., எனும் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு அலுவலகம் தெரிவித்துஉள்ளது.

பி.பி.ஏ.சி., மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

பி.பி.ஏ.சி., மேலும் தெரிவித்துள்ளதாவது:

கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுகள் மற்றும் கார்பன் உமிழ்வு கள் ஆகியவற்றை குறைக்கும் நோக்கில், 'இ - 20' கலவை முறையை, அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இ -- 20 என்பது, பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பதை குறிக்கும்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாத நிலவரப்படி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை அளவு 15.90 சதவீதத்தை எட்டியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதல், நடப்பு ஜூலை வரை மொத்த எத்தனால் கலப்பு பெட்ரோல் வினியோகம் 13 சதவீதமாக இருந்தது. கடந்த ஜூலை 1 நிலவரப்படி, நாட்டில் 14,476 பெட்ரோல் நிலையங்களில், இ -- 20 எரிபொருள் விற்பனை செய்யப்படுகிறது.

வரும் 2025ம் ஆண்டுக்குள், 20 சதவீத விற்பனை இலக்கு நிச்சயம் எட்டப்படும்.

இவ்வாறு தெரிவித்து உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us