கோத்ரேஜ் ஸ்டோரேஜ் ரூ.400 கோடி முதலீடு
கோத்ரேஜ் ஸ்டோரேஜ் ரூ.400 கோடி முதலீடு
கோத்ரேஜ் ஸ்டோரேஜ் ரூ.400 கோடி முதலீடு
ADDED : ஜூலை 18, 2024 11:55 PM

சென்னை:சென்னையில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் தன் இரண்டாவது தொழிற்சாலையை அமைக்க, 'கோத்ரேஜ் ஸ்டோரேஜ்' நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சேமிப்பு கிடங்குகள், கார் பார்க்கிங் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படும் இரும்பிலான கட்டமைப்புகளை, கோத்ரேஜ் ஸ்டோரேஜ் நிறுவனம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது.
தற்போது சென்னை அம்பத்துாரில், இந்நிறுவனத்துக்கு சொந்தமாக ஆண்டொன்றுக்கு 90,000 டன் அளவிலான தயாரிப்பு திறன் கொண்ட தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதில் நடப்பாண்டு 75 சத வீத உற்பத்தி திறனை எட்டி உள்ளது. இந்நிலையில், இரண்டாவது தொழிற்சாலையை அமைக்கவுள்ளது.
இது குறித்து, கோத்ரேஜ் ஸ்டோரேஜ் நிறுவனத்தின் துணை செயல் தலைவர் விகாஸ் சவுதா கூறியதாவது:
தற்போதைய சூழலில் உற்பத்தி போதுமானதாக உள்ளது. இருப்பினும், வரும் 18 மாதங்களில் மற்றுமொரு தொழிற்சாலையை, சென்னையை சுற்றியுள்ள பகுதியில் நிறுவ திட்டமிட்டுள்ளோம்.
இதற்கு, நிலத்தின் மதிப்பை சேர்க்காமல், 350 முதல் 400 கோடி ரூபாய் குறைந்தபட்ச முதலீடாக தேவைப்படும். மேலும், ஏற்றுமதியை பொறுத்தவரை, சென்னை துறைமுகம் தான் எங்களின் முதல் தேர்வாக இருக்கும்.
நடப்பு நிதியாண்டில் 1,000 கோடி ரூபாயும், அடுத்த மூன்று ஆண்டு களில், ஏற்றுமதியுடன் சேர்த்து, ஆண்டுக்கு 1,500 கோடி முதல் 1,600 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
இவ்வாறு கூறினார்.