Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ நிதி கவலைகள், உடல்நலத்தை பாதிக்காமல் காக்கும் வழிகள்

நிதி கவலைகள், உடல்நலத்தை பாதிக்காமல் காக்கும் வழிகள்

நிதி கவலைகள், உடல்நலத்தை பாதிக்காமல் காக்கும் வழிகள்

நிதி கவலைகள், உடல்நலத்தை பாதிக்காமல் காக்கும் வழிகள்

ADDED : ஜூலை 29, 2024 12:50 AM


Google News
Latest Tamil News
வருமானம் எல்லாம் எங்கே போகிறது; என்னால் ஏன் அதிகம் சேமிக்க முடியவில்லை; செலவுகளை கட்டுப்படுத்துவது எப்படி? போன்ற பல கேள்விகள் நிதி கவலைகளை ஏற்படுத்துவது இயல்பானவை. நிதி கவலைகள், கடன் சார்ந்த பிரச்சனைகள் மன அழுத்தத்தை உண்டாக்கி ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

நிதி பிரச்னைகளால்,17 சதவீத இந்தியர்கள் மன அழுத்தம் கொண்டிருப்பதாக அண்மை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எனவே, நிதி கவலைகளின் அறிகுறிகளை கண்டறிந்து, அவற்றை எதிர்கொள்வதற்கான வழிகளை அறிந்திருப்பது அவசியம்.

அதிகரிக்கும் கடன்:


எல்லா தரப்பினருக்கும், கடன் சுமை மன அழுத்தத்தையும், கவலையையும் உண்டாக்கும். தனிநபர் கடன், கிரெடிட் கார்டு என பலவித கடன்கள் இருந்தால் சிக்கல் தான். இந்தியாவில் தனிநபர் கடன் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்களும் தெரிவிக்கின்றன. கடன் சுமையை சமாளிக்க வழியில்லாதது மேலும் கவலை அளிக்கலாம்.

பணியிழப்பு:


அதே போல, மாறி வரும் சூழலில் பணியிழப்பு அபாயமும் மனக் கவலையை அதிகமாக்கலாம். வேகமாக மாறி வரும் தொழில்நுட்ப துறை மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளிலும் ஆட்குறைப்பு அபாயம் இருக்கிறது. வருமானம் இழக்கும் நிலை நிச்சயம் கவலையை அதிகமாக்கும். திறன் மேம்பாடு போன்றவை இதற்கு உதவும்.

சமூக அந்தஸ்து:


செலவுகளை கட்டுப்படுத்தி வருமானத்திற்குள் வாழ்வது சிறந்தது என்றாலும், இன்றைய சமூக ஊடக உலகில் மற்றவர்களின் வாழ்க்கை முறையுடன் ஒப்பிடுவது, மன

அழுத்தத்தை உண்டாக்கலாம். அந்தஸ்திற்காக பொருட்களை வாங்கும் பழக்கம் கொண்டிருப்பது, தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்தலாம்.

ரொக்க இருப்பு:


கைவசம் ரொக்கம் இல்லாத நிலையும் கவலை அளிக்கலாம். இத்தகைய நிதி சிக்கல்கள் அதிகம் இருந்து மன அழுத்தமும் அதிகரித்தால், தவறான வழிகளை நாடவும் தோன்ற லாம். எனவே, பிரச்னையை மூடி மறைக்காமல், யாருடனாவது பகிர்ந்து கொள்வது நல்லது. குறிப்பாக குடும்பத்தினரிடம் மறைக்கக் கூடாது.

ஆலோசனை:


தேவைப்பட்டால் தொழில்முறை ஆலோசனையை நாடுவது ஏற்றது. கடன் ஆலோசனை போன்றவை கைகொடுக்கும். அதன் பிறகு, செலவுகளை கண்காணித்து கட்டுப்படுத்தும் வழிகளை நாட வேண்டும். பட்ஜெட்டை வகுத்துக்கொண்டு அதன்படி செலவு செய்வது, நிதி நிலை மேம்பட உதவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us