/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ சிட்டி யூனியன் வங்கி நிகர மதிப்பு ரூ.8,668 கோடி சிட்டி யூனியன் வங்கி நிகர மதிப்பு ரூ.8,668 கோடி
சிட்டி யூனியன் வங்கி நிகர மதிப்பு ரூ.8,668 கோடி
சிட்டி யூனியன் வங்கி நிகர மதிப்பு ரூ.8,668 கோடி
சிட்டி யூனியன் வங்கி நிகர மதிப்பு ரூ.8,668 கோடி
ADDED : ஜூலை 27, 2024 02:53 AM

சென்னை:சிட்டி யூனியன் வங்கி யின், நடப்பாண்டிற்கான முதலாம் காலாண்டு
கணக்கு முடிவுகளை அதன் நிர்வாகஇயக்குனர் காமகோடி நேற்று சென்னையில் வெளியிட்டார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம்1,580 கோடி ரூபாய். இதர வருமானம் 192 கோடி ரூபாயாக உள்ளது. மொத்த லாபம் 373 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 264 கோடி ரூபாயாகவும் உள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், வங்கியில் நடந்த வியாபாரம் 1.01 லட்சம்கோடி ரூபாயாகஉள்ளது.
வங்கியின் வைப்புத் தொகை மற்றும் கடன் முறையே 54,857 கோடி ரூபாயாகவும், 46,548 கோடி ரூபாயாகவும்உள்ளது.மேலும், வங்கியின் நிகர வாராக்கடன் 1.87 சதவீதமாகவும்; வங்கி சொத்தின் மீதான வருவாய்1.51 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
வங்கியின் நிகர மதிப்பு, கடந்தாண்டு மதிப்பான 7,650 கோடி ரூபாயில் இருந்து, 8,668 கோடியாக உயர்ந்துள்ளது.