துரந்தர் 2 : முதல் நாள் வசூல் எவ்வளவு?
மார் 20, 2026
Advertisement
ஆதித்ய தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நாயகனாக நடித்து நேற்று வெளியான படம் "துரந்தர் த ரிவெஞ்ச்". கடந்த ஆண்டு வெளியான "துரந்தர்" படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளியாகி உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் பிரிமியர் காட்சிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. பல இடங்களில் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. நேற்று ஹிந்தி தவிர மற்ற மாநில மொழிகளில் படம் வெளியாகவில்லை. இருப்பினும் ஹிந்திப் பதிப்பிற்கான வரவேற்பு அமோகமாக இருந்தது.
இந்தியாவில் மொத்தம் 170 கோடி, வெளிநாடுகளில் 60 கோடி என மொத்தம் 230 கோடி வசூலைக் கடந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ வசூலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகமும் 1000 கோடி வசூலைக் கடக்கும் என்ற நம்பிக்கை பாலிவுட்டில் உள்ளது. படத்தைப் பார்த்த பல மொழி சினிமா பிரபலங்கள் படத்தை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள். அதுவே படத்திற்கு நல்ல விளம்பரமாக அமைந்து வருகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!