இறந்துபோன பாடகரால் சல்மான்கானின் ‛மாத்ரு பூமி படத்திற்கு புதிய சிக்கல்
மார் 21, 2026
Advertisement
சல்மான்கான் நடிப்பில் தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் படம் ‛மாத்ரு பூமி". முதலில் ‛பேட்டில் ஆப் கல்வான்" என டைட்டில் வைக்கப்பட்டு சமீபத்தில் தான் இதன் டைட்டில் பாத்ரூம் பூமி என மாற்றப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் அபூர்வ லகியா இயக்கி வருகிறார். ஏற்கனவே ஏப்ரலில் வெளியாகும் விதமாக திட்டமிட்டு தான் இந்த படம் தயாராகி வந்தது. அதேசமயம் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாடகரும் நடிகருமான பிரசாந்த் தமாங் என்பவரை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர். சல்மான்கான் உள்ளிட்டோருடன் இவர் நடிக்கும் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி இறுதியில் இவர் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார்.
இதனையடுத்து இவர் இல்லாமல் எப்படி மீதி படத்தை முடிப்பது என்றும் அல்லது இவரது காட்சிகளை நீக்கிவிட்டு இவருக்கு பதிலாக புதிய நடிகரை வைத்து படப்பிடிப்பு நடத்தினால் ஏற்படும் கால விரயம் மற்றும் அதிகப்படியான செலவு குறித்தும் தற்போது படக்குழுவினர் மிகுந்த சிக்கலை சந்தித்து வருகின்றனர். ஏஐ தொழில்நுட்பம் மூலம் இதை சமாளிக்க முடியுமா என்றும் தற்போது அவர்கள் விவாதித்து வருகின்றனராம். இதனால் மாத்ரு பூமி திரைப்படத்தின் ரிலீஸ் இன்னும் சில மாதங்கள் தள்ளிப்போக கூடும் என தெரிகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!