/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் வாலிபர் படுகாயம்கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் வாலிபர் படுகாயம்
கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் வாலிபர் படுகாயம்
கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் வாலிபர் படுகாயம்
கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் வாலிபர் படுகாயம்
UPDATED : ஜூன் 16, 2025 07:20 AM
ADDED : ஜூன் 15, 2025 11:20 PM

உத்தர கன்னடா: கார்வாரில் கட்டுமான பணியில் உள்ள கட்டடத்தில் இருந்த சிறுத்தை, அவ்வழியாக வந்த வாலிபரை தாக்கியதில், அவர் படுகாயம் அடைந்தார்.
உத்தர கன்னடா மாவட்டம், அங்கோலாவின் உலகட்டே கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் கவுடா, 24. இவரின் வீட்டின் அருகில் வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம், துணியை உலர வைத்திருந்தார்.
நேற்று காலை துணிகளை எடுத்து வர கட்டடம் அருகில் சென்றார். அதே நேரத்தில் அந்த கட்டடத்தில் பதுங்கி இருந்த சிறுத்தையும் வெளியே வந்தது.
இதை பார்த்த சந்தோஷ் கவுடா, அலறியடித்து ஓடினார். துரத்திய சிறுத்தை, அவரை தாக்கியது. இவரின் கூச்சல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த சிறுத்தை, அங்கிருந்து ஓடியது. காயம் அடைந்த சந்தோஷ் கவுடா, தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள், கிராமத்துக்கு வந்தனர். அவர்களிடம், அகசூரு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் அனந்து கவுடா கூறுகையில், ''வீட்டிற்கு அருகில் வந்து மனிதர்களை தாக்கும் அளவுக்கு சிறுத்தைகள் வந்துவிட்டன. இதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களையும், அவர்களின் கால்நடைகளையும் காக்க உரிய நடவடிக்கை எடுங்கள்,'' என்று கேட்டு கொண்டார்.