/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மின்சார ஒயரை மிதித்த தாய் யானை, குட்டி பலி மின்சார ஒயரை மிதித்த தாய் யானை, குட்டி பலி
மின்சார ஒயரை மிதித்த தாய் யானை, குட்டி பலி
மின்சார ஒயரை மிதித்த தாய் யானை, குட்டி பலி
மின்சார ஒயரை மிதித்த தாய் யானை, குட்டி பலி
ADDED : ஜூன் 15, 2025 11:19 PM

ஹாசன்: ஹாசன் மாவட்டம், சக்லேஸ்பூர் - பேலுார் இடையே உள்ள ஆரோஹள்ளியின் கேசகுள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் திருமலை, நாகராஜு. ரங்கஷெட்டி என்பவருக்கு சொந்தான எஸ்டேட்டில் பணியாற்றி வருகின்றனர்.
இப்பகுதியில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது. நேற்று காலை இவர்கள் பணிக்கு சென்றனர். எஸ்டேட்டுக்குள் சென்ற போது, ஒயர் கருகும் வாசம் வந்தது. இன்னும் சிறிது துாரம் நடந்து சென்று பார்த்த போது, உணவு தேடி வந்த தாய் யானையும், அதன் குட்டியும், அறுந்த விழுந்த மின்சார ஒயர் மீது கால் வைத்ததால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர்கள், எஸ்டேட் உரிமையாளருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கூலி தொழிலாளர் திருமலை கூறியதாவது:
நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் குட்டி யானை பிளிறும் சத்தம் கேட்டது. இந்நேரத்தில் யானை அருகில் செல்ல வேண்டாம் என்று வீட்டில் இருந்தேன்.
நேற்று முன்தினம் இங்கு மின்சார பிரச்னை உள்ளது என்று போனில் புகார் அளித்தோம். மழை நின்றவுடன் வருவதாக தெரிவித்தனர். மழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால், அவர்களும் வரவில்லை.
நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்று பார்த்தபோது, இரு யானைகளும் உயிரிழந்திருந்தது. யானையின் அருகில் இருந்த மின்சார ஒயரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால், மின் இணைப்பை துண்டித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.