/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜாமினில் வந்த நண்பர் கொலை 2 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு ஜாமினில் வந்த நண்பர் கொலை 2 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
ஜாமினில் வந்த நண்பர் கொலை 2 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
ஜாமினில் வந்த நண்பர் கொலை 2 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
ஜாமினில் வந்த நண்பர் கொலை 2 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
ADDED : ஜூன் 15, 2025 11:21 PM
ஆர்.ஆர்.நகர்: ஜாமினில் வந்த நண்பரை கொன்ற வழக்கில், கைது செய்ய சென்ற போது, ஏ.எஸ்.ஐ.,யை கத்தியால் தாக்கிய, இரண்டு ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.
பெங்களூரு ஜே.ஜே.நகர் ஜனதா காலனியை சேர்ந்தவர்கள் விஜய், 26, தீபு, 28, அருண், 27. நண்பர்களான மூன்று பேரும் ரவுடிகள் ஆவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய்க்கும், தீபு, அருணுக்கும் இடையில் முன்விரோதம் ஏற்பட்டது.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, அருணை, விஜய் கத்தியால் குத்தினார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சமீபத்தில் ஜாமின் கிடைத்தது. சிறையில் இருந்து நேற்று முன்தினம் மதியம் வெளியே வந்தார்.
தப்பியோட்டம்
இந்நிலையில், விஜயிடம் மொபைல் போனில் பேசிய அருணும், தீபுவும், 'பழைய பிரச்னைகளை மறந்து விடுவோம்; ஒன்றாக இருப்போம்' என்று கூறி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் விஜயை, தீபுவும், அருணும் சேர்ந்து கத்தி, அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். ஜே.ஜே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடிவந்தனர்.
இந்நிலையில் தீபுவும், அருணும் ஆர்.ஆர்.நகர் பகுதியில் பதுங்கி இருப்பது பற்றி, ஜே.ஜே.நகர் இன்ஸ்பெக்டர் கெம்பேகவுடாவுக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., பத்மநாபா, ஏ.எஸ்.ஐ., குமார், கான்ட்ஸ்டபிள் கரீம் சாப் ஆகியோரை அழைத்து கொண்டு, இருவரையும் கைது செய்ய சென்றார்.
எச்சரிக்கை
ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியில் சுற்றித்திரிந்த இருவரையும், போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஏ.எஸ்.ஐ., குமார், கான்ஸ்டபிள் கரீம் சாப் மீது, இருவரும் தாக்கி விட்டு தப்பினர்.
அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் கெம்பேகவுடா, எஸ்.ஐ., பத்மநாபா துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடையும்படி எச்சரித்தனர். இருவரும் கேட்கவில்லை.
இதனால், இன்ஸ்பெக்டரும், எஸ்.ஐ.,யும் இருவரின் வலது கால்களிலும் துப்பாக்கியால் சுட்டு அவர்களை பிடித்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயம் அடைந்த ஏ.எஸ்.ஐ., கான்ட்ஸ்டபிளும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 'தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது' என்று, மேற்கு மண்டல டி.ஜி.பி., கிரிஷ் கூறினார்.