/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மைதானத்திற்கு சென்றது ஏன்? சிவாவிடம் கோபப்பட்ட சித்து மைதானத்திற்கு சென்றது ஏன்? சிவாவிடம் கோபப்பட்ட சித்து
மைதானத்திற்கு சென்றது ஏன்? சிவாவிடம் கோபப்பட்ட சித்து
மைதானத்திற்கு சென்றது ஏன்? சிவாவிடம் கோபப்பட்ட சித்து
மைதானத்திற்கு சென்றது ஏன்? சிவாவிடம் கோபப்பட்ட சித்து
ADDED : ஜூன் 08, 2025 04:05 AM
பெங்களூரு: “சின்னசாமி மைதானத்தில் நடந்த, ஆர்.சி.பி., வெற்றிக் கொண்டாட்டத்திற்கு எதற்கு சென்றீர்கள்?” என, துணை முதல்வர் சிவகுமாரிடம், முதல்வர் சித்தராமையா கோபத்தை காட்டி உள்ளார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், கடந்த 4ம் தேதி ஆர்.சி.பி., அணி வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர். ஆனாலும் மைதானத்திற்குள் கொண்டாட்டம் நடந்ததும், இதில் துணை முதல்வர் சிவகுமார் கலந்து கொண்டதும் மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படுத்தியது.
கடந்த 5ம் தேதி தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, போலீஸ் அதிகாரிகள் அலட்சியத்தால் தான் அரசுக்கு கெட்ட பெயர் என்று துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.
இதை கேட்டு கடும் கோபம் அடைந்த சித்தராமையா, “ஆர்.சி.பி., வெற்றிக் கொண்டாட்டத்திற்கு நீங்கள் எதற்கு சென்றீர்கள்? ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்தில் ஆர்.சி.பி., வீரர்களை வரவேற்க, ஏன் சென்றீர்கள்? விதான் சவுதா முன் நடந்த நிகழ்ச்சியில் எந்த பிரச்னையும் இல்லை. நீங்கள் மைதானம் சென்றதை வைத்து, எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்,” என்று காட்டமாக கூறி உள்ளார்.
“மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியை நிறுத்தத் தான் அங்கு சென்றேன். நான் அங்கு செல்லாவிட்டாலும் உயிரிழப்பு நடந்ததை இல்லை என்று சொல்ல முடியுமா?” என சிவகுமார் கேட்டு உள்ளார்.
அமைச்சர்கள் சிலரும் ஆக்ரோஷமாக பேசியதால், அமைச்சர்களை வெளி அனுப்பி விட்டு, சித்தராமையா, சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மட்டும் தொடர்ந்து ஆலோசித்து உள்ளனர். அதன்பின் தான், போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.