/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மகேஷ் திம்மரோடி, சின்னையா உரையாடும் வீடியோ வைரல் மகேஷ் திம்மரோடி, சின்னையா உரையாடும் வீடியோ வைரல்
மகேஷ் திம்மரோடி, சின்னையா உரையாடும் வீடியோ வைரல்
மகேஷ் திம்மரோடி, சின்னையா உரையாடும் வீடியோ வைரல்
மகேஷ் திம்மரோடி, சின்னையா உரையாடும் வீடியோ வைரல்
ADDED : செப் 20, 2025 11:12 PM
மங்களூரு: தர்மஸ்தலாவில் உடல்களை புதைத்தது பற்றி, மகேஷ் திம்மரோடியிடம், சின்னையா விளக்கும் வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலா வழக்கில் பொய் புகார் அளித்த, சின்னையா சிறையில் உள்ளார். அவரை பின்னால் இருந்து இயங்கியதாக, ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரனே வேதிகே தலைவர் மகேஷ் திம்மரோடி, சமூக ஆர்வலர்கள் கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களிடம் எஸ்.ஐ.டி., விசாரணை நடத்தியது.
இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு, உஜ்ரேயில் உள்ள வீட்டில் மகேஷ் திம்மரோடியை சந்தித்து, சின்னையா பேசும் வீடியோ நேற்று வெளியானது.
'தர்மஸ்தலாவில் நிறைய உடல்களை புதைத்துள்ளேன். மேலதிகாரிகள் கூறியதையடுத்து, நிறைய பேரை அடித்து உதைத்துள்ளேன். அர்ச்சகர் ஒருவரின் மகள், மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலையும் புதைத்தேன். அர்ச்சகர் குடும்பத்தில் யாருமே கண்ணீர் விடவில்லை' என, வீடியோவில் சின்னையா கூறியிருக்கிறார்.
திட்டமிட்டு பரப்பப்படும் இதுபோன்ற வீடியோக்களால், தர்மஸ்தலா வழக்கில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது.