/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 6,018 பெயர்கள் அழிக்க முயற்சி: எஸ்.ஐ.டி., அமைப்பு 6,018 பெயர்கள் அழிக்க முயற்சி: எஸ்.ஐ.டி., அமைப்பு
6,018 பெயர்கள் அழிக்க முயற்சி: எஸ்.ஐ.டி., அமைப்பு
6,018 பெயர்கள் அழிக்க முயற்சி: எஸ்.ஐ.டி., அமைப்பு
6,018 பெயர்கள் அழிக்க முயற்சி: எஸ்.ஐ.டி., அமைப்பு
ADDED : செப் 20, 2025 11:12 PM
பெங்களூரு: ஆலந்த் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து 6,018 பெயர்க ளை அழிக்க முயன்றதாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டிய நிலையில், இதுபற்றி விசாரிக்க எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு அமைத்துள்ளது.
கர்நாடகாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், கலபுரகியின் ஆலந்த் தொகுதியில் காங்கிரசின் பி.ஆர்.பாட்டீல் வெற்றி பெற்றார்.
ஆனாலும் தேர்தலின்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து 6,018 பெயர்களை அழிக்க சதி நடந்ததாக குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
டில்லியில் கடந்த 18ம் தேதி ராகுல் கூறுகையில், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை தனிநபர்கள் நீக்குவதாகவும், இதற்காக சாப்ட்வேர் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், ஆலந்த் தொகுதியில் 6,018 பெயர்களை அழிக்க முயன்றது பற்றி விசாரிக்க, எஸ்.ஐ.டி.,யை கர்நாடக அரசு நேற்று அமைத்தது.
இந்த குழுவின் தலைவராக சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., பி.கே.சிங், விசாரணை அதிகாரிகளாக ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சைதுல் அதாவத், சுபன்விதா நியமிக்கப்பட்டு உள்ளனர்.