/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குருபா சமூகம் குறித்து சர்ச்சை மேல்சபை தலைவர் மீது வழக்கு குருபா சமூகம் குறித்து சர்ச்சை மேல்சபை தலைவர் மீது வழக்கு
குருபா சமூகம் குறித்து சர்ச்சை மேல்சபை தலைவர் மீது வழக்கு
குருபா சமூகம் குறித்து சர்ச்சை மேல்சபை தலைவர் மீது வழக்கு
குருபா சமூகம் குறித்து சர்ச்சை மேல்சபை தலைவர் மீது வழக்கு
ADDED : செப் 20, 2025 11:15 PM

பெங்களூரு: குருபா, எஸ்.டி., சமூகங்கள் இடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சா ஆகியோர் மீது, விதான் சவுதா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் குருபா சமூகத்தை எஸ்.டி., பிரிவுடன் இணைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய அரசு தயாராகி வருகிறது. அரசின் முடிவுக்கு, பா.ஜ., எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குருபா சமூகத்தை சேர்ந்த சித்தண்ணா, கர்நாடக டி.ஜி.பி., சலீமை நேற்று முன்தினம் மதியம் சந்தித்து, புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், 'எங்கள் சமூகத்தை, எஸ்.டி., பிரிவுடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி, மைசூரு கிருஷ்ணராஜா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சா ஆகியோர், ஊடகத்தினரிடம் பேசும்போது, சித்தராமையாவை விமர்சிக்கும் வகையில், குருபா சமூகத்தை அவமதித்து பேசி உள்ளனர்.
அவர்களது பேச்சு, இரு சமூகத்திற்கு இடையில் பிரச்னை துாண்டி விடும் வகையில் உள்ளது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது.
இருவரும் பேசிய இடம், விதான் சவுதா வளாகத்தில் என்பதால், விதான் சவுதா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும்படி, சித்தண்ணாவுக்கு, சலீம் அறிவுறுத்தினார். இதனால் அவர் போலீஸ் நிலையம் சென்று, இருவர் மீதும் புகார் செய்தார்.
புகாரை அடுத்து, சலவாதி நாராயணசாமி, ஸ்ரீவத்சா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.