/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பி.இ.எம்.எல்., தொழிற்சாலைக்கு 'உத்தம் சுரக் ஷா' விருது பி.இ.எம்.எல்., தொழிற்சாலைக்கு 'உத்தம் சுரக் ஷா' விருது
பி.இ.எம்.எல்., தொழிற்சாலைக்கு 'உத்தம் சுரக் ஷா' விருது
பி.இ.எம்.எல்., தொழிற்சாலைக்கு 'உத்தம் சுரக் ஷா' விருது
பி.இ.எம்.எல்., தொழிற்சாலைக்கு 'உத்தம் சுரக் ஷா' விருது
ADDED : செப் 10, 2025 01:29 AM

பெங்களூரு : பாதுகாப்பு துறையில் சிறந்த பங்களிப்புக்காக தங்கவயல் பி.இ.எம்.எல்., தொழிற்சாலைக்கு 'உத்தம் சுரக் ஷா' விருது வழங்கப்பட்டது.
இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ், பி.இ.எம்.எல்., எனும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் இயங்குகிறது.
பாதுகாப்புத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின்- கர்நாடகா பிரிவு, தங்கவயல் பி.இ.எம்.எல்., தொழிற்சாலைக்கு 'உத்தம் சுரக் ஷா' விருதை நேற்று வழங்கியது.
பெங்களூரில் நடந்த விழாவில் இந்த விருதை தங்கவயல் பி.இ.எம்.எல்., தொழிற்சாலையின் மேலாளர் சுப்பிரமணி, பாதுகாப்பு அதிகாரி ராஜேஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கர்நாடக பிரிவின் தலைவர் வெங்கடேஷ் வருலு, தொழிற்சாலைகள், பாய்லர்கள், தொழில்துறை பாதுகாப்பு பிரிவின் இயக்குநர் கே. ஸ்ரீனிவாஸ், இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் லலித் ஆர். கபானே ஆகியோர் வழங்கினர்.
பாதுகாப்பு உபகரணங்கள், மெட்ரோ, சுரங்க கட்டுமானம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களின் முன்னணி உற்பத்தியாளராக விளங்குவதற்காக பி.இ.எம்.எல்., தொழிற்சாலைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.