/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ புதிய 'சர்க்குலர் ரயில்வே' திட்டம் மத்திய அமைச்சர் சோமண்ணா தீவிரம் புதிய 'சர்க்குலர் ரயில்வே' திட்டம் மத்திய அமைச்சர் சோமண்ணா தீவிரம்
புதிய 'சர்க்குலர் ரயில்வே' திட்டம் மத்திய அமைச்சர் சோமண்ணா தீவிரம்
புதிய 'சர்க்குலர் ரயில்வே' திட்டம் மத்திய அமைச்சர் சோமண்ணா தீவிரம்
புதிய 'சர்க்குலர் ரயில்வே' திட்டம் மத்திய அமைச்சர் சோமண்ணா தீவிரம்
ADDED : ஜூன் 08, 2025 04:03 AM

பெங்களூரு:''பெங்களூரை சுற்றிலும் 271 கி.மீ., துாரத்துக்கு, 'புதிய சர்க்குலர் ரயில்வே திட்டம்' செயல்படுத்தப்படும். புறநகர் ரயில், இத்துடன் இணைக்கப்படும்,'' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
பெங்களூரு குமாரகிருபா அரசு தங்கும் விடுதியில், நேற்று மாநிலத்தில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவது குறித்து முன்னேற்ற கூட்டம், ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தலைமையில் நடந்தது.
மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா, எம்.பி.,க்கள் மோகன், மஞ்சுநாத், மாநில அமைச்சர் முனியப்பா, அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின், சோமண்ணா கூறியதாவது:
பெங்களூரை சுற்றிலும் 271 கி.மீ., துாரத்துக்கு, 'புதிய சர்க்குலர் ரயில்வே திட்டம்' செயல்படுத்தப்படும். இத்துடன் புறநகர் ரயில் இணைக்கப்படும். இதற்காக, 2,500 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மொத்த தொகையையும், ரயில்வே துறையே ஏற்கும். கிராமங்களுக்கு இடையே ரயில் இயக்கக்கூடாது என்று கருத்து நிலவுகிறது.
எனவே, கே.ஐ.இ.டி.பி., எனும் கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான நிலம் பயன்படுத்தப்படும். இது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசித்து, டி.பி.ஆர்., எனும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
எலஹங்கா - தேவனஹள்ளி இடையே முனையம் அமைக்கப்படும். இதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. முழு தொகையும் மத்திய அரசே ஏற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
என் கனவு
அமைச்சர் முனியப்பா கூறியதாவது:
நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். விவசாய நிலம், நீர்ப்பாசன நிலத்தை தவிர்த்து, வட்டச்சாலை அமைக்க வேண்டும். இதற்கு அவகாசம் தேவை.
கிராமங்கள் வழியாக செல்லும் சாலைகளை, ஐந்து அல்லது ஆறு கி.மீ., நீட்டிக்க வேண்டும். இதனால் மக்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது.
மக்கள்தொகை அதிகரிப்புக்கும், வளர்ந்து வரும் தொழில்களுக்கும் ஏற்ற வகையில், ரயில்வே திட்டங்கள் விரிவடைந்து வருகின்றன. சாதாரண குடிமக்களும் பயனடையும் வகையில் இத்திட்டம் இருக்க வேண்டும்.
நகரில் மெட்ரோ ரயில் போக்குவரத்தும் விரிவடைந்து வருவதால், அதற்கு ஏற்ற வகையில் திட்டங்கள் வகுக்க வேண்டும். எந்தவொரு செயல் திட்டத்தையும் உருவாக்கும் போது, மாநில அரசு, அதிகாரிகளுடன் கூட்டம் நடத்த வேண்டும்.
கோலாரின் பங்கார்பேட்டை செல்லும் எலஹங்கா - சிக்கபல்லாபூர் வழித்தடத்தில், 'லெவல் கிராசிங்' சாலை; கோலாரில் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.