ADDED : ஜூன் 08, 2025 04:04 AM

பெங்களூரு: கர்நாடகாவில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. தொழுகை செய்த பின், முஸ்லிம்கள் கட்டி தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர்.
ரம்ஜானுக்கு அடுத்து முஸ்லிம்கள் கொண்டாடும், முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. நாடு முழுதும் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கர்நாடகாவிலும் பக்ரீத் கொண்டாட்டங்கள் நடந்தன. மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில், முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
பெங்களூரின் சாம்ராஜ்பேட்டில் நடந்த கூட்டு தொழுகையில், முஸ்லிம்கள் திரளாக பங்கேற்றனர். தொழுகை முடிந்த பின், ஒருவரை ஒருவர் கட்டி தழுவி வாழ்த்து தெரிவித்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.
மொபைல் போனில் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிறுவர், சிறுமியர் ஒருவர் தோள் மீது இன்னொருவர் கைபோட்டு அன்பை பரிமாறிக் கொண்டனர்.