Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மகனை புதைத்த இடத்தில் தந்தை கதறல் முதல்வர், துணை முதல்வருக்கு கேள்வி

மகனை புதைத்த இடத்தில் தந்தை கதறல் முதல்வர், துணை முதல்வருக்கு கேள்வி

மகனை புதைத்த இடத்தில் தந்தை கதறல் முதல்வர், துணை முதல்வருக்கு கேள்வி

மகனை புதைத்த இடத்தில் தந்தை கதறல் முதல்வர், துணை முதல்வருக்கு கேள்வி

ADDED : ஜூன் 08, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: ஆர்.சி.பி., பாராட்டு கூட்ட நெரிசலில் இறந்தவர்கள், அரசை திட்டி தீர்ப்பது தொடர்கதையாக உள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ஹாசன், பேலுார் தாலுகா, குப்பகோட்டியை சேர்ந்த பூமிக், 19, என்பவரும் உயிரிழந்தார். இவரது மூன்றாவது நாள் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. அப்போது, பூமிக் தந்தை லட்சுமணன், மகன் புதைக்கப்பட்ட இடத்தில் படுத்துக் கொண்டு கதறி அழுதார்.

அவர் கூறியதாவது:

என் மகனுக்கு ஏற்பட்ட நிலை, வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. ஆம்புலன்ஸ் இல்லாததால் பூமிக் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு முதல்வர், துணை முதல்வர், உள்துறை அமைச்சரே காரணம்.

அவர்களின் குழந்தைகள், விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக, நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர். இதுவே, அவர்கள் குழந்தைகளுக்கு நடந்திருந்தால், கோப்பையுடன் நின்று புகைப்படம் எடுத்திருப்பார்களா? இது என்னுடைய கண்ணீர் மட்டுமல்ல; எனது 11 குடும்ப உறுப்பினர்களின் கண்ணீர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிவாரண தொகை உயர்வு


உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் என அரசு அறிவித்து இருந்தது. தற்போது, நிவாரண தொகை 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது.

ஒரு ரூபாய் கூட தரவில்லை!

என் மகன் சிவலிங்கா, விராத் கோலியின் தீவிர ரசிகன். அவரை பார்க்கச் சென்று இறந்துவிட்டார். இதுவரை, என் வீட்டிற்கு அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை. இழப்பீடு என ஒரு ரூபாய் கூட தரவில்லை. இறுதிச்சடங்கிற்கு கூட கடன் வாங்கி செலவு செய்துள்ளேன்.

சாந்தம்மா கும்பாரா,

தாய்

மறக்க மாட்டேன்

என் மகன் பூர்ண சந்திராவின் இறப்பு, என்னை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவனுடன் செலவிட்ட நேரத்தை எண்ணி வருந்துகிறேன். அவன் இல்லாமல், என்னால் எதுவும் செய்ய முடியாது. இச்சம்பவத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது.

ராமசந்திரா,

தந்தை

பிரேத பரிசோதனை

என் மகன் பிரஜ்வலின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என பல முறை கெஞ்சினேன். என்னிடம் அனுமதி வாங்காமலே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது போன்று வேறு எங்காவது நடக்குமா? முதல்வர், துணை முதல்வர் என யாரும் ஆறுதல் கூட கூறவில்லை.

பவித்ரா,

தாய்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us