/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தேவகவுடா, குமாரசாமியுடன் சதீஷ் ஜார்கிஹோளி சந்திப்பு தேவகவுடா, குமாரசாமியுடன் சதீஷ் ஜார்கிஹோளி சந்திப்பு
தேவகவுடா, குமாரசாமியுடன் சதீஷ் ஜார்கிஹோளி சந்திப்பு
தேவகவுடா, குமாரசாமியுடன் சதீஷ் ஜார்கிஹோளி சந்திப்பு
தேவகவுடா, குமாரசாமியுடன் சதீஷ் ஜார்கிஹோளி சந்திப்பு
ADDED : மார் 27, 2025 05:23 AM
மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, மத்திய அமைச்சர் குமாரசாமி ஆகியோரை டில்லியில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளராக அமைச்சர் ராஜண்ணா உள்ளார். முதல்வர் நாற்காலி மீது கண் வைத்திருந்த துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிராக, ராஜண்ணா கருத்துகளை தெரிவித்து வந்தார்.
இதற்கிடையில், தன்னை ஹனி டிராப்பில் சிக்கவைக்க முயற்சி நடந்ததாக சட்டசபையில் ராஜண்ணா தெரிவித்தார். இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதுதொடர்பாக மேலிடத்தில் விரிவாக விளக்கம் அளிக்க, தன் ஆதரவாளரான சதீஷ் ஜார்கிஹோளியை, முதல்வர் சித்தராமையா, டில்லிக்கு அனுப்பி வைத்தார்.
காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த அவர், நேற்று முன்தினம் இரவு மத்திய அமைச்சர் குமாரசாமி சந்தித்துப் பேசினார்.
பின், ம.ஜ.த., தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவையும் சதீஷ் ஜார்கிஹோளி சந்தித்துப் பேசினார். மாநில வளர்ச்சி, அரசியல் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதித்ததாக கூறப்பட்டது.
எனினும், ஹனி டிராப் விவகாரம் குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
'எதிரிக்கு எதிரி நண்பர்' என்ற பழமொழிக்கு ஏற்ப, துணை முதல்வர் சிவகுமாருக்கு 'செக் மேட்' வைக்க, இவ்விருவரையும் சதீஷ் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது
. - நமது நிருபர் -