/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'மத அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை' 'மத அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை'
'மத அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை'
'மத அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை'
'மத அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை'
ADDED : மார் 27, 2025 05:23 AM
மைசூரு: “மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை,” என, காங்கிரஸ் எம்.எல்.சி., யதீந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதாக ஆங்கில செய்தி சேனலில் துணை முதல்வர் சிவகுமார் கூறவில்லை. அவர் சொல்ல வந்தது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. காங்கிரஸ் தான் அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்தது. நாங்கள் ஏன் அதை மாற்றப் போகிறோம்?
'ஹனி டிராப்' பிரச்னைகள் நடக்கும் சூழலில், தங்கள் வீடுகளில் அமைச்சர்கள் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். பா.ஜ.,விற்குள்ளும் 'ஹனி டிராப்' நடந்தது.
இதனால் தான் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களும், முன்னாள் முதல்வரும் நீதிமன்றத்தில் தடை கோரினர். அப்படி இருக்கையில், காங்., தலைவர்கள் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை.
பிரதமர் மோடி முஸ்லிம் சமூகத்தில் உள்ள 70 சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதாக கவுரவமாக கூறுகிறார். மோடி இட ஒதுக்கீடு அளித்தால் பாராட்டுவது, காங்., அளித்தால் எதிர்ப்பதா?
மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகவே இட ஒதுக்கீடு வழங்கி உள்ளோம்.
கடந்த 1977ல் ஹவனுார் கமிஷன் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்தது. இதனால், பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்போது, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கர்நாடகாவில் மட்டும் இல்லை, பிற மாநிலங்களிலும் இருக்கிறது.
என் தந்தை சித்தராமையா முதல்வராக இருப்பதால், அமைச்சர் பதவியின் மீது ஆசை கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.