/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காவிரி 5ம் கட்ட திட்டத்தில் 83,000 வீடுகளுக்கு இணைப்பு காவிரி 5ம் கட்ட திட்டத்தில் 83,000 வீடுகளுக்கு இணைப்பு
காவிரி 5ம் கட்ட திட்டத்தில் 83,000 வீடுகளுக்கு இணைப்பு
காவிரி 5ம் கட்ட திட்டத்தில் 83,000 வீடுகளுக்கு இணைப்பு
காவிரி 5ம் கட்ட திட்டத்தில் 83,000 வீடுகளுக்கு இணைப்பு
ADDED : மார் 27, 2025 05:24 AM
பெங்களூரு: பெங்களூரு நகரத்தில் உள்ள 110 கிராமங்களில் வசிப்பவர்களின் வீடுகளுக்கு, காவிரி நீர் இணைப்பு வழங்க பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் திட்டமிட்டது. இதற்கு காவிரி 5ம் கட்ட திட்டம் என பெயரிடப்பட்டது.
இத்திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. 4 லட்சம் வீடுகளுக்கு காவிரி இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது, 83,000 வீடுகளுக்கு மட்டுமே காவிரி நீர் இணைப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதிலும், 55,000 வீடுகளில் திட்டம் துவங்குவதற்கு முன்பில் இருந்தே காவிரி நீர் இணைப்புகள் உள்ளன.
கடந்த ஆறு மாதங்களில் புதிதாக வெறும் 30,000 வீடுகளுக்கு மட்டுமே இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இது குடிநீர் வாரியத்தின் இலக்கில் கால் பங்கு கூட இல்லை என தெரிய வந்துள்ளது.