Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ யுகாதி, ரம்ஜானுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., கூடுதலாக 2,000 பஸ்கள் இயக்கம்

யுகாதி, ரம்ஜானுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., கூடுதலாக 2,000 பஸ்கள் இயக்கம்

யுகாதி, ரம்ஜானுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., கூடுதலாக 2,000 பஸ்கள் இயக்கம்

யுகாதி, ரம்ஜானுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., கூடுதலாக 2,000 பஸ்கள் இயக்கம்

ADDED : மார் 27, 2025 05:25 AM


Google News
பெங்களூரு: 'பயணியர் வசதிக்காக, யுகாதி, ரம்ஜானை முன்னிட்டு, இம்மாதம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை கூடுதலாக 2,000 பஸ்கள் இயக்கப்படும்' என, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து தர்மஸ்தலா, குக்கே சுப்பிரமண்யா, ஷிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, தாவணகெரே, ஹூப்பள்ளி, தார்வாட், பெலகாவி, விஜயபுரா, கோகர்ணா, சிர்சி, கார்வார், ராய்ச்சூர், கலபுரகி, பல்லாரி, கொப்பால், யாத்கிர், பீதர், திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத் உட்பட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மைசூரு சாலை பஸ் நிலையத்தில் இருந்து மைூசரு, ஹூன்சூர், பெரியபட்டணா, விராஜ்பேட், குஷால் நகர், மடிகேரிக்கு இயங்குகின்றன.

சாந்தி நகரில் பி.எம்.டி.சி., பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பிரீமியம் பஸ்கள், மதுரை, கும்பகோணம், சென்னை, கோயம்புத்துார், திருச்சி, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு உட்பட தமிழகம், கேரளாவுக்கு இயங்குகிறது.

ஆன்லைனில் முன்பதிவு செய்வோர், www.ksrtc.karnataka.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி, மஹாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் நிற்கும் இடங்களில் உள்ள கவுன்டர்களில் முன்பதிவு செய்யலாம்.

கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு உட்பட்ட பஸ்கள், அனைத்து மாவட்ட, தாலுகாக்களில் உள்ள பஸ் நிலையங்களில் இருந்தும் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us