ADDED : ஜூன் 16, 2025 07:18 AM
பெங்களூரு : கொரோனா தொற்று குறைந்து வருவதால், சுகாதாரத்துறை நிம்மதி அடைந்துள்ளது. நேற்று 25 பேருக்கு கொரோனா உறுதியானது.
இது தொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில் கொரோனா தொற்று, படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று (முன் தினம்) 67 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இன்று (நேற்று) 25 பேருக்கு தொற்று உறுதியானது. 381 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 24 பேருக்கு தொற்று உறுதியானது.
மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, 1,781 ஆக அதிகரித்தது. தொற்று பரவும் அளவும் 7.8 சதவீதமாக குறைந்துள்ளது. மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பெறுகிறார். நேற்று (முன் தினம்) ஏழு பேர், குணமடைந்து மருத்துவனையில் இருந்து, வீடு திரும்பினர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.