/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 3 நாள் சட்டசபை அவசர கூட்டம்; சித்தராமையாவுக்கு அசோக் கடிதம் 3 நாள் சட்டசபை அவசர கூட்டம்; சித்தராமையாவுக்கு அசோக் கடிதம்
3 நாள் சட்டசபை அவசர கூட்டம்; சித்தராமையாவுக்கு அசோக் கடிதம்
3 நாள் சட்டசபை அவசர கூட்டம்; சித்தராமையாவுக்கு அசோக் கடிதம்
3 நாள் சட்டசபை அவசர கூட்டம்; சித்தராமையாவுக்கு அசோக் கடிதம்
ADDED : ஜூன் 16, 2025 07:17 AM
பெங்களூரு : சின்னசாமி மைதானம் முன்பு ஏற்பட்ட, கூட்ட நெரிசல் பற்றி விரிவாக விவாதிக்க மூன்று நாட்கள் சட்டசபை அவசர கூட்டத்தை கூட்டும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கடிதம் எழுதி உள்ளார்.
அசோக் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முன்பு இம்மாதம் 4 ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியானது துரதிர்ஷ்டவசமானது. 75 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்த சம்பவம் மாநிலத்தை உலுக்கி உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு, கூட்ட கட்டுப்பாடு குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்பி உள்ளது. மக்கள் மத்தியில் பதற்றம், கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு நிர்வாக குறைபாடு, அரசின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. உண்மையை மறைக்க மூன்று விசாரணை அமைப்புகள் விசாரிக்கின்றன. இந்த வழக்கில் தவறு செய்யாத அதிகாரிகள் பலிகடா ஆக்கப்பட்டதாக மக்கள் பேசுகின்றனர். இதனால் கூட்ட நெரிசலில் என்ன நடந்தது என்பது பற்றி விவாதிக்க, மூன்று நாட்கள் சட்டசபை அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி விரிவான விவாதம் தேவைப்படுகிறது.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.