ADDED : ஜூன் 01, 2025 06:50 AM
பெலகாவி: பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவானந்த் மல்லன்னவர். இவர் நடப்பு பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றால், அந்த நாளை, பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென, முதல்வர் சித்தராமையாவுக்கு 28ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம், இதுவரை நடந்த பிரீமியர் லீக் தொடர்களில், ஆர்.சி.பி., அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை.
அப்படி இருக்கையில், நடப்பாண்டு தொடரில் ஆர்.சி.பி., அணி, இறுதிப்போட்டிக்கு தேர்வு ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.