/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு தொல்லை மனித உரிமை ஆணைய தலைவர் எச்சரிக்கை விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு தொல்லை மனித உரிமை ஆணைய தலைவர் எச்சரிக்கை
விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு தொல்லை மனித உரிமை ஆணைய தலைவர் எச்சரிக்கை
விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு தொல்லை மனித உரிமை ஆணைய தலைவர் எச்சரிக்கை
விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு தொல்லை மனித உரிமை ஆணைய தலைவர் எச்சரிக்கை
ADDED : ஜூன் 01, 2025 06:49 AM

தங்கவயல்: ''மனித உரிமை ஆணையம் பெயரில் லெட்டர் பேடு, விசிட்டிங் கார்டு வைத்துக் கொண்டு அதிகாரிகளுக்கு தொல்லை கொடுப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கர்நாடக மனித உரிமை ஆணைய தலைவர் டாக்டர் ஷியாம் பட் தெரிவித்தார்.
தங்கவயல் பி.இ.எம்.எல்., விருந்தினர் மாளிகையில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில், மனித உரிமை ஆணையத்தின் கடமைகள் குறித்து, அவர் பேசியதாவது:
மனித உரிமைகள் மீறும் பட்சத்தில் பலர், புகார்களை மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்புகின்றனர். புகார்தாரர் எந்த பிரச்னைக்காக புகார் கொடுக்கின்றனரோ, அது சட்டத்துக்கு உட்பட்டதாக இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டத்துக்கு புறம்பாக இருந்தால், நடவடிக்கை எடுக்க சாத்தியம் இல்லை என்று விபரத்தை தெரிவிக்க வேண்டும். இதை மேல் முறையீட்டுக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ சென்று தீர்வு காணட்டும்.
சிலர், மனித உரிமை சங்கம் பெயரில், லெட்டர் பேடு வைத்துள்ளனர். சிலர், விசிட்டிங் கார்டு செய்து, அரசு அலுவலகங்களில், அதிகாரிகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக புகார் வந்துள்ளது. அப்படி யாருக்கும் மனித உரிமை ஆணையம் அனுமதி அளித்ததில்லை.
அதிகாரிகளுக்கு சட்டத்துக்கு புறம்பாக தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் வண்டிகோட் பேசியதாவது:
சுற்றுப்புற சீர்கேடு, சுகாதார பிரச்னைகள் குறித்து நகராட்சி அதிகாரிகள் மீது புகார்களும்; குடிநீர் கிடைப்பதில்லை, சுத்தமாக இல்லை என்று குடிநீர் வழங்கல் துறை மீதும், சாலை சீரில்லை என்று பொதுப்பணித் துறை மீதும் அரசு மருத்துவமனையில் உரிய மருத்துவ வசதி கிடைப்பதில்லை என்று மருத்துவத் துறை மீதும் புகார் அளிக்க சென்றால் அரசியல் செல்வாக்கு காரணமாக போலீசார் வழக்குப் பதிவு செய்வதில்லை என்றும் மனித உரிமை ஆணையத்துக்கு புகார்கள் வருகின்றன.
இவை அந்தந்த துறை அதிகாரிகளே தீர்க்க முடியும். வரும் புகார்கள் தங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இல்லை என்றால், அவற்றை உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெரிவிக்கலாமே தவிர, புகார்தாரர்களை வெறுக்கக் கூடாது;
உரிய வழிமுறைகளை கூற வேண்டும். மனித உரிமைகள் காக்க சட்டத்தில் இடம் உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.
தங்கவயல் எஸ்.பி., சாந்த ராஜு, தாசில்தார் நாகவேணி, நகராட்சி ஆணையர் பவன்குமார், உட்பட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.