/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இரண்டு தலைகளுடன் அதிசய ஆட்டுக்குட்டி இரண்டு தலைகளுடன் அதிசய ஆட்டுக்குட்டி
இரண்டு தலைகளுடன் அதிசய ஆட்டுக்குட்டி
இரண்டு தலைகளுடன் அதிசய ஆட்டுக்குட்டி
இரண்டு தலைகளுடன் அதிசய ஆட்டுக்குட்டி
ADDED : செப் 04, 2025 03:44 AM

மைசூரு: மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவின், குரஹட்டி கிராமத்தில் வசிப்பவர் விவசாயி ரவீஷ். இவர் ஆடுகள் வளர்க்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு, இவரது ஆடு ஒன்று, இரண்டு குட்டிகளை ஈன்றது. இதில் ஒன்று விசித்திரமான தோற்றத்தில் இருந்தது.
இந்த குட்டிக்கு இரண்டு தலை, நான்கு கண்கள், இரண்டு காது, இரண்டு வாய் உள்ளது. உடல் மட்டும் சாதாரணமாக உள்ளது. தகவலறிந்த கால் நடைத்துறை டாக்டர்கள், கிராமத்துக்கு வந்து ஆட்டுக்குட்டியை பரிசோதித்தனர். குட்டி ஆரோக்கியமாக உள்ளது.
இத்தகைய குட்டி பிறக்க என்ன காரணம் என்பது குறித்து, ஆய்வு செய்தனர். மரபணு குறைபாட்டால் இதுபோன்று பிறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விநோத ஆட்டுக்குட்டியை காண, அக்கம் பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் ஆர்வத்தோடு வருகின்றனர்.