/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 300 கிலோ மணல் மூட்டையுடன் அபிமன்யு யானைக்கு பயிற்சி 300 கிலோ மணல் மூட்டையுடன் அபிமன்யு யானைக்கு பயிற்சி
300 கிலோ மணல் மூட்டையுடன் அபிமன்யு யானைக்கு பயிற்சி
300 கிலோ மணல் மூட்டையுடன் அபிமன்யு யானைக்கு பயிற்சி
300 கிலோ மணல் மூட்டையுடன் அபிமன்யு யானைக்கு பயிற்சி
ADDED : செப் 04, 2025 03:45 AM

மைசூரு: மைசூரு தசராவில் தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானைக்கு, 300 கிலோ எடை கொண்ட மணல் மூட்டையை சுமக்கும் பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.
மைசூரு தசராவின் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்து கொள்ள, பல முகாம்களில் இருந்து 14 யானைகள் மைசூருக்கு வந்துள்ளன.
அரண்மனை வளாகத்தில் தங்கியுள்ள யானைகளுக்கு, தினமும் நடைபயிற்சி அளிக்கப்படுகிறது.
ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமக்கும், அபிமன்யு யானைக்கு மணல் மூட்டையை சுமக்கும் பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.
அரண்மனை வளாகத்தில் இருந்து 300 கிலோ எடை கொண்ட, மணல் மூட்டையை சுமந்தபடி, 5 கி.மீ., துாரத்தில் உள்ள பன்னிமண்டபம் வரை, அபிமன்யு யானை நடந்து சென்றது. அதனை பின்தொடர்ந்து மற்ற யானைகளும் சென்றன.
இதுகுறித்து மைசூரு வன அதிகாரி பிரபு கவுடா கூறுகையில், ''அம்பாரி சுமக்கும் அபிமன்யு யானை 300 கிலோ எடை கொண்ட மணல் மூட்டை மற்றும் 200 கிலோ எடை கொண்ட மெத்தை என, மொத்தம் 500 கிலோ எடையை சுமந்து செல்லும் பயிற்சி அளிக்கப்பட்டது.
' 'கடந்த ஐந்து ஆண்டுகளாக அம்பாரி சுமப்பதால், அபிமன்யுவிடம் இருந்தே பயிற்சி துவங்கப்பட்டுள்ளது.
''தனஞ்ஜெயா, மகேந்திரா, பிரசாந்த், பீமா யானைகளுக்கும், சுழற்சி அடிப்படையில், மணல் மூட்டை சுமக்கும் பயிற்சி அளிக்கப்படும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை இந்த பயிற்சி நடக்கும்,'' என்றார்.