/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விவசாயியிடம் நகை பறிப்பு 4 போலி சாமியார்கள் கைது விவசாயியிடம் நகை பறிப்பு 4 போலி சாமியார்கள் கைது
விவசாயியிடம் நகை பறிப்பு 4 போலி சாமியார்கள் கைது
விவசாயியிடம் நகை பறிப்பு 4 போலி சாமியார்கள் கைது
விவசாயியிடம் நகை பறிப்பு 4 போலி சாமியார்கள் கைது
ADDED : செப் 04, 2025 03:45 AM
சித்ரதுர்கா: ஆரூடம் கூறுவது போன்று நடித்து, விவசாயியை காரில் ஏற்றிக் கொண்டு, தங்க மோதிரத்தை பறித்த நான்கு போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டனர்.
சித்ரதுர்கா நகரின், சிக்ககொண்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரவிகுமார். இவர் நேற்று காலை, கிராமத்தை ஒட்டியுள்ள, தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்தார். அங்கு காரில் நான்கு சாமியார்கள் வந்தனர்.
அவர்கள் விவசாயி ரவிகுமாரிடம், 'நாங்கள் ஆரூடம் கூறுவோம். உள்ளதை உள்ளபடி கூறுவோம்' என நம்பவைத்து, அவரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டனர். ஆரூடம் கூறுவது போன்று நடித்து, அவரது கையில் இருந்த தங்க மோதிரத்தை பறித்து, அவரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு தப்பினர். விவசாயி உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு, புகார் அளித்தார். போலீசாரும் காரை விரட்டி பிடித்து, அதில் இருந்த நான்கு போலி சாமியார்களையும், ஓட்டுநரையும் கைது செய்தனர்.