/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மோடி பயணத்தால் சாதனை தேவகவுடா பாராட்டு மோடி பயணத்தால் சாதனை தேவகவுடா பாராட்டு
மோடி பயணத்தால் சாதனை தேவகவுடா பாராட்டு
மோடி பயணத்தால் சாதனை தேவகவுடா பாராட்டு
மோடி பயணத்தால் சாதனை தேவகவுடா பாராட்டு
ADDED : செப் 04, 2025 03:44 AM

பெங்களூரு: அமெரி க்காவின் வரி விதிப்பு போரை மீறி, ஜப்பான், சீனாவுக்கு சென்று வெற்றிகரமாக திரும்பிய பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி, முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் எழுதி உள்ளார்.
தேவகவுடா கடிதம்:
ஜப்பான், சீனாவுக்கு நீங்கள் சென்று வந்த செய்தியை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.
விவேகமற்ற, நியாயமற்ற வரி போரை அமெரிக்க துவக்கிய பின்னர், மாற்றுத்தீர்வை தேடுகிறீர்கள். இதில் அனைத்து இந்தியர்கள் போல, நா னும் நிம்மதி அடைகிறேன்.
இரு நாடுகளுக்கு நீங்கள் மேற்கொண்ட பயணம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நீங்கள் நடத்திய பேச்சு, எடுத்த புதிய முயற்சியால், இந்தியா பயனடையும் என்று நம்புகிறேன்.
உக்ரைன் போரை முடிப்பது குறித்து புடினுடன் நீங்கள் பேசி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்விஷயத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். நீங்கள் பின்பற்றும் 'பன்முக சீரமைப்பு' கொள்கை, வரும் நாட்களில் நிச்சயமாக மிகுந்த பலனை தரும்.
இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.