Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசியலில் இருந்து ஓய்வு மாலுார் நஞ்சேகவுடா சவால்

அரசியலில் இருந்து ஓய்வு மாலுார் நஞ்சேகவுடா சவால்

அரசியலில் இருந்து ஓய்வு மாலுார் நஞ்சேகவுடா சவால்

அரசியலில் இருந்து ஓய்வு மாலுார் நஞ்சேகவுடா சவால்

ADDED : செப் 18, 2025 11:00 PM


Google News
Latest Tamil News
கோலார்: ''உய ர் நீதிமன்ற உத்தரவுப்படி மாலுார் சட்டசபை தொகுதியில் மறு ஓட்டு எண்ணிக்கை நடந்து, பா.ஜ., மஞ்சுநாத் கவுடா வெற்றி பெற்றால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்,'' என்று, மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா சவால் விடுத்து உள்ளார்.

மாலுாரில் நேற்று அவர் அளித்தபேட்டி:

கடந்த 2013 சட்டசபை தேர்தலுக்கு முன், ஹொஸ்கோட் தொகுதியில் இருந்து மஞ்சுநாத் கவுடாவை அழைத்து வந்து, மாலுாரில் போட்டியிட வைத்து எம்.எல்.ஏ., ஆக்கினேன். ஆனால் இப்போது பா.ஜ.,வில் இருக்கும் அவர், எனக்கு எதிராகவே அரசியல் செய்கிறார்.

கடந்த தேர் தலில் என்னை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனது வெற்றியை பொறுத்து கொள்ள முடியாமல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மறு ஓட்டு எண்ணிக்கைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். அதற்கு 30 நாள் அவகாசம் உள்ளது.

மறு ஓட்டு எண்ணிக்கை நடந்து அதில் மஞ்சுநாத் கவுடா வெற்றி பெற்றால், அரசியலில் இருந்தே நான் ஓய்வு பெறுகிறேன். மறு ஓட்டு எண்ணிக்கை நடந்தாலும் சரி, மீண்டும் தேர்தல் நடந்தாலும் சரி, மாலுாரில் அவர் வெற்றி பெற மாட்டார்.

நான் 1986 முதல் மாலுார் அரசியலில் உள்ளேன். தொகுதி மக்கள் எனக்கு பல வாய்ப்பு கொடுத்து உள்ளனர். உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்த அன்று இரவு, எனது வீட்டிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினர். எனக்கு தலைவிதி இருந்தால் எதிர்காலத்தில் அமைச்சர் ஆவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us